ஜே.ஏ.மொனேசஸ். யாழ்ப்பாணம்: குடும்ப மேய்ப்புப் பணி நிலையம், சேந்தான்குளம், இளவாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1980. (யாழ்ப்பாணம்: ஆர். எஸ்.அச்சகம்).
(2), 22 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
‘உலகெங்கும் விரைவாகப் பரவிவரும் இயற்கை முறைக் குடும்பநலத் திட்டங்கள் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த திருமணத் தம்பதிகளுக்கு அவர்கள் இச்சிக்கலால் அல்லலுறும் போது நம்பிக்கைக்குரியதும் பாதுகாப்பானதுமான கருத்தடை முறை ஒன்றை அளிக்கின்றன. இலங்கையில் இயற்கை முறையில் குடும்பநலத் திட்டத்தைப் பரப்புவது மிகப்பெரியதும் உடனடித் தேவையுமான பணியாகும். இப்பொருள் பற்றித் தவறான கருத்துக்கள் பல மக்கள் மத்தியில் நிலவி வருவதால் போதுமான விளம்பரம் செய்வது இன்றியமையாதது. இத்தகைய தேவையை நிறைவேற்ற இந்திய கத்தோலிக்க மருத்துவக் கழகத்தின் தலைவர் Dr. J.A.Menezes அவர்கள் எழுதியுள்ள புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இச்சிறு நூலை வெளியிடுகின்றோம். இந்நூல் இயற்கைமுறைக் குடும்பநலத் திட்டத்தின் முக்கியமான அம்சங்களை எளிய நடையில் விளக்குவதோடு அதன் சம்பந்தப்பட்ட அவசியமான விடயங்களையும் தருகின்றது. பிறப்புக் கட்டுப்பாட்டுச் சிக்கலைப் பற்றிக் கவலை கொண்டுள்ள அனைவரும், குறிப்பாகத் தம்பதியரும், நம் நாட்டில் குடும்ப நலத்திற்காகப் பணியாற்றுபவர்களும் இச்சிறுநூலைப் படித்து நற்பயன் அடையுமாறு பரிந்துரைக்கின்றோம். (அணிந்துரையில், சுவாமி சி.இ.நி.குணசீலன்). (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38596).