இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு. கொழும்பு 7: இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, 36, மலலசேகர மாவத்தை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(1-12), 13-80 பக்கங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN:978-624-5040-10-0.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIBOC) இலங்கையின் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து 2019 மார்ச் மதம் 18ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஐந்து வருட தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைவாக இவ்வழிகாட்டிகளை உருவாக்கியுள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பு நிவாரண ஏற்பாடுகள் வகிக்கும் பிரதான வகிபாகத்தை அங்கீகரித்து ஊழலுக்கான சாத்தியங்களை குறைப்பதற்கான புதிய கருத்தாக்கங்களும் நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் அரச நிறுவனங்களை பரவலாக்கல் மற்றும் வலுப்படுத்துவதன் மூலம் நாட்டில் தற்போதுள்ள சட்ட மற்றும் ஒழுக்காற்று வரைபு நகலுக்கு மிகை நிரப்பியாக இவ்வழிகாட்டிகள் அமையும். ஒரு வருட காலப்பகுதியில் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடலின் விளைவாக இக்கைந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.