இலங்கை சாரணர் சங்கம். கொழும்பு: இலங்கை சாரணர் சங்க வெளியீடு, 65/9, GOBA Avenue, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
27 பக்கம், சித்திரம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21 சமீ.
இளைய தலைமுறையினரின் கல்வி விழுமியங்களை கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும் கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் இலங்கை சாரணர் சங்கம் இயங்குகின்றது. இளைய தலைமுறையினரை சமூகத்தில் மதிப்புமிக்க தரப்பினராக வளர்ப்பதில் இச்சங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இவ்வித செயற்பாடுகளால் அவர்கள் நாட்டின் நல்ல பிரஜைகளாக மாறும் வாய்ப்புக் கிட்டுகின்றது. சாரணர் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும் போது சிறுவர்கள் மற்றும் இளையோர் நல்ல அனுபவங்களையும் பயிற்;சிகளையும் பெற்றுக்கொள்கின்றனர். அது அவர்களது வாழ்க்கைக்கும் எதிர்கால செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக சிறுவர்கள் மற்றும் இளையோரிடையே சிறந்த பண்பு மற்றும் வாழ்க்கை திறன்களை வளர்க்க சாரணர் சங்கம் முயற்சிக்கிறது. சாரணர் இயக்கத்தின் நான்கு பிரிவுகளில் கற்றல் நிலை பிரிக்கப்பட்டுள்ளது. கோட்பாடுகளை கற்றுக்கொள்வது அவற்றை வெளியில் நடைமுறைப்படுத்துவது மற்றும் அத்தகைய திறன்களின் பயன்பாடு வெளிப்புற வாழ்க்கையில் மலைகள் ஏறுதல், காடுகளில் சுற்றித் திரிதல், ஓடைகளில் துடுப்பு செய்தல் மற்றும் முகாமிடுதல் போன்ற செயற்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கனேடிய நிதியத்தின் அனுசரணையுடன் வெளிவந்துள்ள சிறுவர்களுக்கான வனக்கதை இலக்கிய நூல் வரிசையில் வெளிவரும் முதலாவது நூல் இது. அவர்களது பயிற்சிகளுக்கான பின்புலத்தை வழங்கும் வகையில் இந்நூல் சாரணர் இயக்கத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது.