17262 அறிவூட்டும் அகராதி: கட்டுரைக் களஞ்சியம்.

வடகோவை பூ.க.இராசரத்தினம் (இயற்பெயர்: கந்தப்பு இராசரத்தினம்). கொழும்பு 6: வடகோவை பூ.க.இராசரத்தினம், 36/2 A, 37ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

148 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-93547-0-8.

மாணவர்கள் தமது உள்ளார்ந்த ஆற்றல்களை உள்ளூரத் தெரிந்துகொண்டு முழுமையான உணர்ச்சியை எய்துவதற்குரிய நிலையையும் வாய்ப்பினையும் உருவாக்கும் வகையில் அறிவாற்றலையும் அறிவுணர்வையும் உணர்த்துவதே கல்வியின் நோக்கமாக அமைய வேண்டும். இக்கருத்தை அடிப்படையாக வைத்து இந்நூலில் உள்ள கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. உலக ஆசிரியர் தினம், சட்டக் கல்வி காலத்தின் தேவை, கல்வி கற்பித்தலில் பெற்றோரின் பங்கு, மொழி சிந்தனையின் வாகனம், நாடு வளம்பெற கல்வி ஒரு கருவி, மனித மனம் வாழ்க்கையின் விளைநிலம், சர்வதேச பத்திரிகைச் சுதந்திர தினம், புத்தகங்களும் புதுமை நிறைந்த எண்ணங்களும், உலக மனநலிவு நோய்த் தினம் (டவுன் சின்ட்ரோம்), சர்வதேச கல்வித் தினம், மண்ணைப் பாதுகாப்பது எமது கடமை, உலக நீர்த்தினம், பொதுநலவாயம், ஒப்பில்லா ஒலிம்பிக், அறிவு வளர்ச்சியும் விளையாட்டும், உலக காதலர் தினம், உயிரியல் பல்வகைமையும் தொற்று நோய்களும், சர்வதேச அறிவைப் பெற உதவும் சரித்திரம், ஆளுமைத் திறன் அபிவிருத்தியும் தலைமைத்துவப் பண்புகளும், அறிவூட்டும் அகராதி, கற்றலை கற்பவரிடம் விட்டுவிடுவோம், தேவை அதிக அறிவல்ல விளக்கத்துடன் வாழும் தகுதி, இறவா வரம் பெற்ற மகாத்மா காந்தி, வாழ்வை வளப்படுத்தும் வளமான புத்தகங்கள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூல் கல்விப் புலத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்த, ஓய்வுபெற்ற அதிபர் அமரர் வடகோவை பூ.க.இராசரத்தினம் (07.01.1931-11.06.1922) அவர்களின் மறைவின் பின்னர் அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

El Torero a charming & grazil slot

Content Schlussfolgerung und El Torero für nüsse vortragen – extra cash Angebote Funktionen des El Torero Automatenspiels El Torero Slot Demo How to Play El