17266 சமகாலக் கல்வித் திரட்டு.

மா.கருணாநிதி. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2019. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

vi, 134 பக்கம், விலை: ரூபா 560., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-150-2.

கலாநிதி மா.கருணாநிதி கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் அப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிறுவனமாக இயங்கும் NEREC நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். கலாநிதி கருணாநிதி எழுதிய 12 கல்வியியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல்  வெளிவந்துள்ளது. கல்வியும் சமூக நகர்வும்: இலங்கை பற்றிய ஒரு நோக்கு, கல்வியும் சமூக நகர்வும்: பெருந்தோட்டச் சமூகம் பற்றிய ஒரு நோக்கு, இலங்கையில் கல்விக் கொள்கைகள் நடைமுறைகளும் விளைவுகளும், இலங்கையில் கல்வியும் பால்நிலைச் சமத்துவமும், பாடசாலையில் கல்வியும் பால்நிலைச் சமத்துவமும், பாடசாலையில் பெறுமானக் கல்வி, உலகளாவிய செல்நெறியும் கற்றலும், இடைநிலைக் கல்வியில் தராதரம் பற்றிய எழுவினாக்கள், வகுப்பறைச் செயற்பாடுகள்: மொழித் தேர்ச்சியும் வாசிப்புத் திறனும், மாணவர் கற்றலில் செல்வாக்குச் செலுத்தும் ஆசிரியர் எதிர்பார்ப்புகள், ஆரம்ப வகுப்பு ஆசிரியரின் கற்றல் பாங்குகள், வினையாற்றல் குறைந்த ஆசிரியர்களை முகாமைத்துவம் செய்தல், ஆசிரியர் கல்வியில் கட்டுருவாக்க அணுகுமுறைகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71448).

ஏனைய பதிவுகள்