17267 சமூகம் வழங்கிய புலமைத்துவ அடையாளங்கள்: கி.பி.1900 வரை.

ஞானசேகரன் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 86 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8354-74-2.

ஞானம் பதிப்பகத்தின் ‘ஈழமும் தமிழும் தொடரில்’ ஏழாவது நூலாக வெளிவந்துள்ள இந்நூல் ஈழத்து தமிழ் இலக்கிய, இலக்கண, கணித, சோதிட விற்பன்னர்களுக்கு 1900வரை வழங்கப்பட்டிருந்த அவர்களுக்குரிய பட்டங்களைப் பற்றியும், அவை சமூகத்தால் வழங்கப்பட்டதற்கான காரணங்களையும் ஆய்வுசெய்கின்றது. குறிப்பாக உருட்டன், சங்கீதச் சுப்பையர், கணித சிங்கம், இலக்கணக் கொட்டன், இலக்கணக் கொத்தர், நாடகப் புலவர், கோவைத்துறைச் சுவாமிநாதர், நாடகச் சுவாமிநாதர், கவிராசர், தர்க்ககுடாரதாலுதாரி, சுத்தாத்துவித சைவசித்தாந்த பிரசாரகர், சித்துப் புலவர், புலவன் கனகசபை, பரசமய கோளரி, ஏகசந்தக்கிராகி, சின்னத்தம்பி புலவர், பட்டதாரிப் பையன், சின்னக் காளமேகம், கணிதப்புலி யூகிளிட், தோடஞ்ஞர்‎‎‎ எனப் பல பட்டங்கள் அந்நாட்களில் வழங்கப்பட்டு வந்துள்ளமையை ஆசிரியர் விரிவாக எடுத்துக்காட்டுகின்றார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52928).

ஏனைய பதிவுகள்

Totally free ports no deposit slots

Blogs Tonybet 10 free spins no deposit | Almost every other slots away from Apollo Games: Popular Slots Following Expertise – gangster globe position free