சோ.சந்திரசேகரம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 136 பக்கம், விலை: ரூபா 795., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-726-4.
சர்வதேசக் கல்விமுறைகளின் செல்நெறிகள் பற்றிப் பேசும் இந்நூலில் தொடருறு (Online) கல்வியின் இன்றைய நிலை, முன்பள்ளிக் கல்வியின் உலகளாவிய முக்கியத்துவம், மேற்கு நாடுகளில் மாறிவரும் பாடசாலைகள், மாணவர்களின் திறன்களை வளர்க்காத கல்விமுறைகள், இருபத்தோராம் நூற்றாண்டின் கல்வி எழுச்சியில் பல்துறைசார் எழுத்தறிவுகள், பல்கலைக்கழகங்களில் சமூக அறிவியல் கல்விக்கு எதிர்ப்பு, தேசிய கல்வி முறைகளின் எழுச்சி பற்றிய ஒரு பார்வை, 21ஆம் நூற்றாண்டுக்கான STEM (Science, Technology, Engineering and Mathematics) பாட ஏற்பாடு, சிங்கப்பூரின் இருமொழிக் கொள்கை, சுதந்திர இலங்கையின் கல்வி வளர்ச்சி, அமெரிக்கர்கள் பாராட்டும் ஆசியக் கல்வி முறைகள், ஐக்கிய அமெரிக்காவின் காந்தப் பாடசாலைகளும் பட்டயப் பாடசாலைகளும், உலகளாவிய இந்தியர்களின் உயர்கல்வி வாய்ப்புகள், கணினிகள் மாணவர்களின் பெறுபேறுகளை மேம்படுத்தாது, நவீன உலகில் மனிதனே ஒரு மூலதனம், சர்வதேசப் பரீட்சைகளில் (PISA-Programme for International Student Assessment) இந்தியாவின் பின்னடைவு, வெளிவளப் பயன்பாடும் கல்விச் செயற்பாடும், வளர்முக நாடுகளில் பாடசாலைக் கல்வியைத் தொழில்நுட்பத்துடன் இணைத்தல், புதிய நூற்றாண்டுக்கான ஆசிரியர் கல்வி, பாடமைய பாடசாலைப் பாட ஏற்பாட்டை மாற்ற முற்படும் பின்லாந்து ஆகிய 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.