பாலசுப்பிரமணியம் தனபாலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 152 பக்கம், விலை: ரூபா 1300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-6164-46-1.
சமகாலக் கல்விச் செல்நெறியில் மிக முக்கிய கல்விப் பிரயோகமாக உட்படுத்தல் கல்வி யும் விசேட கல்வியும் முதன்மை வகிக்கின்றன. விசேட தேவைகள், வறுமை, பொருளாதார, சமூகப் பின்னடைவுகள் மற்றும் அநர்த்தங்களால் கற்றலில் பங்கு பற்றாமலிருக்கும் அனைவரையும் பாடசாலையில் கற்கவைக்கும் செயன்முறையே உட்படுத்தல் கல்வியாகும். அவ்வகையில் தமிழ்ச் சூழலில் இதனை விளங்கிக்கொள்ள இந்நூல் உதவுகின்றது. உலகளாவிய உட்படுத்தல் கல்வி, பாடசாலைகளில் விசேட கல்வி உட்படுத்தல் கல்விப் பிரயோகம், சகலருக்குமான கல்வியின் இலட்சியம் உட்படுத்தல் கல்வி, உட்படுத்தல் கல்விக்கான பிரவேசமும் கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகளின் குணநலன்களும், உட்படுத்தல் கல்வியில் பிள்ளைநேயப் பாடசாலைகள், முன்பள்ளிப் பிள்ளையில் காணப்படும் செவிப்புலக் கோளாறுகள் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக விசேட தேவைகளுடைய பிள்ளைகளுக்கான இசைவாக்கம் தரக்கூடிய சாதனங்கள், முன்பள்ளிச் சிறார்களிடத்தில் காணப்படும் அபிவிருத்திசார் காலதாமதத்தை மதிப்பிடல், விசேட கல்வி, உட்படுத்தல் கல்வி தொடர்பான பரீட்சை வினாக்களும் விடைகளும் ஆகிய மூன்று ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.