சி.சிவகுமார் (இதழாசிரியர்), என்.நிறேசன் (இணை இதழாசிரியர்). மட்டக்களப்பு: ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம், ஏறாவூர், 1வது பதிப்பு, ஜுலை 2023. (மட்டக்களப்பு: ஹிறா அச்சகம்).
xiv,(12), 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
03.07.2023 அன்று ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் 57ஆவது அகவை நினைவு தினத்தில் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையின் பெயரில் வெளிவரும் முதலாவது மலர் இதுவாகும். ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் 2000 மாணவர்களைக் கொண்டிருந்த இப்பாடசாலை தற்போது 350 மாணவர்களுடன் இயங்கிவருகின்றது. ஆசிரியர், மாணவர்களின் ஆக்கங்களுடன் இம்மலர் வெளிவந்துள்ளது.