17275 சிவசக்தி 1980-1981.

சிவப்பிரகாசம் இரவிதரன் (மலராசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1981. (கொழும்பு 12: கலா பிரின்டர்ஸ், 258/5, டாம் வீதி).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

கொழும்பு ரோயல் கல்லூரியின் இந்து மாணவர் மன்றம் 1962இல் வெளியிடத் தொடங்கிய இவ்வாண்டிதழின் வெளியீடு, 1970இல் தவிர்க்கமுடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. மீண்டும் 1981இல் புதுப்பொலிவுடன் முகிழ்ந்துள்ளது. தேவாரம், தேவியின் திருநாம அர்ச்சனை, தமிழ்த் தாய் வாழ்த்து, மற்றும் ஆசிச் செய்திகளுடனும் வாழ்த்துச் செய்திகளுடனும் தொடங்கும் இம்மலரில், பாரதியாரும் சக்தி வழிபாடும், ஈழத்தில் துர்க்கை வழிபாடு, மதமில்லா வாழ்வேது, சக்திக்கொரு வழிபாடாம் நவராத்திரி, சைவ சமயம், அந்தாதி பாடிய அபிராமிப்பட்டர், அம்மன் அருள், சக்தி வழிபாடு, நாமகள் வெண்பா மாலை, சிவசக்தி-நான் போற்றுகிறேன், நாவலர் சைவத்தின் காவலர், நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே, நவராத்திரி விழா, நடப்பு வருடத்தில் நாம் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4590).

ஏனைய பதிவுகள்