17276 சிவசக்தி 1982-1983.

தெட்சணாமூர்த்தி குகன், சப்பாணி இரவீந்திரன் (மலராசிரியர்கள்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1983. (அச்சக விபரம் தரப்படவில்லை).

80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

தேவாரம், தேவியின் திருநாம அர்ச்சனை, தமிழ்த் தாய் வாழ்த்து, மற்றும் ஆசிச் செய்திகளுடனும் வாழ்த்துச் செய்திகளுடனும் தொடங்கும் இம்மலரில், சமயமும் மகாகவி பாரதியும் (க.கந்தசுவாமி), நெஞ்சு பொறுக்குதில்லையே (தெட்சணாமூர்த்தி குகன்), அன்பர் மொழிவாசகம் (மு.சபாரத்தினம்), நவராத்திரி வழிபாடு (சீ.அருட்குமரன்), சமயமும் சமூகமும் (என்.ஜனகன்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4590).

ஏனைய பதிவுகள்

16429 புதிய ஈசாப் கதைகள்-1.

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது  தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2008. (சென்னை: சிவம்ஸ்). 47 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா