கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).
(68) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.
இவ்விதழில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், போதும் மனிதா (கவிதை- பா.இராஜ் பிரகாஷ்), அறிவளிக்கும் தேவி (கவிதை-நிலக்ஷன் சுவர்ணராஜா), நவாலியூர் களையோடை கண்ணகி அம்மன் ஆலயம் (தி.றஞ்சன்), நவராத்திரி விழாவின் பெருமைகள், ஈழத்துத் திருக்கோயில்களுக்கு ஒரு பயணம் (மு.கங்காதரன்), இறைவனுக்கு ஒரு மடல் (M.S.அய்னாஸ் நவாஸ்), ஈஸ்வர அல்லா தேரே நாம் (D.R.S செல்வேந்திரா), பிள்ளையார் (எஸ்.செந்தூரன்), Office bearers 1994 Royal College Hindu Students Union, Vocal Music (Vaani Isai) (J.Nadarajamoorthy), றோயல் கல்லூரி இந்து மாணவர் மன்றத்தால் நடாத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளின் விபரங்கள் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.