பாலேந்திரன் காண்டீபன் (இதழாசிரியர்). கொழும்பு: இந்து மாணவர் மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403-1/2, காலி வீதி, வெள்ளவத்தை).
(80) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.
இவ்விதழில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், சைவ நீதி ஒரு வாழ்க்கை முறை (மா.கணபதிப்பிள்ளை), கம்பவாரிதியுடன் ஓர் நேர்காணல்: கம்பவாரிதி இ.ஜெயராஜ் (செவ்வி கண்டவர்: பிரதம ஆசிரியர் இந்து மாணவர் மன்றம்), அமெரிக்க நாட்டு சகோதர சகோதரிகளே- விவேகானந்தர்: சில சிந்தனைகள் (த.ஸ்ரீரமணன்), எல்லாம் முடிந்து விட்டதம்மா (கவிதை-A.ஹரிஷன்), புதியதொரு உலகம் படைப்போம் (கவிதை-P.பிரணவன்), இயற்கை (கவிதை-T.கஜபாகு), விடியலின் வித்தைகள் (கவிதை-S.சூரியபிரதாப்), கருவறையே கல்லறையானால்….. (கவிதை- S.சிவசங்கரன்), என்றும் தாழாத சைவம் (கவிதை-நவரத்தினராஜா ரமுனாகர்), ஆசிரியர்கள் (கவிதை- M.R.M.றிபாஸ்), சிவன் எங்கே? (கவிதை-க.சித்தார்ந்தன்), ஒரு வேத்திய இந்துவின் சுயசரிதை (கவிதை- வி.விமலாதித்தன்), பயமெனும் பேய்தனை அடிப்போம் (கவிதை-ரா.ஸ்ரீநாத்), தாயும் ஆனவன் (கவிதை-கஜவதனி), கருகி விழும் சருகுகள் (கவிதை-எம்.ரிஸ்வான்), உலகு அழகு ஒற்றுமை நியதி (கவிதை-பாலேந்திரன் காண்டீபன்), அடிமை என்றினி அகிலமெங்குமில்லை (கவிதை-ரா.டிலுக்ஷன்), சமயம் கொண்டு சாமம் பெறுவாய் (கவிதை-நி.நிஷாந்தனன்), திண்ணிய நெஞ்சம் வேண்டும் (ஆ.பிரணவன்), இந்து மாணவர் மன்றத்தால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சமயத் திறன்காண் போட்டிகளும் முடிவுகளும், இந்து மாணவர் மன்றத்தால் பாடசாலைக்குள் நடாத்தப்பட்ட சமயத் திறன் காண் போட்டி முடிவுகள்), எமது சமயம், போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் (P.விபுலன்), நான் விரும்பும் பெரியார் (சிவலிங்கம் சிவகாந்தன்), ஆரியர் வருகையும் இந்துசமயமும் (செ.கீர்த்தன்), வாழ்வியல் சரிதைகளில் மானிடம் (தெ.சுவாகிதன்), வரலாறு கூறும் பெண்ணின் மகத்துவம்: சமயம், இலக்கியம் போன்ற துறையினூடு ஒரு கண்ணோட்டம் (ம.பிரதீப்), சில புராண நூல்களும் அவற்றை இயற்றியவர்களும், கீதையில் பகவானுக்கு அமைந்த நாமங்கள், அட்ட வீரட்டாணங்கள், ‘மனம் தானே காரணம்’ (ரமணமகரிஷி), மாணவமணிகளே கவனியுங்கள் (சுவாமி சிம்மையானந்தா), சித்தர்கள் (தொகுப்பு: யோ.அரவிந்தன்), சோம்பல் மிகக்கெடுதி (சிறுகதை-கு.ஜெனீவன்), முறிக்கப்பட்ட சிறகுகள் (சிறுகதை-ச.சுதாமதி), சமயமும் மனித வாழ்க்கையும், நவராத்திரி பூசை (N.குருஷாந்), சைவ சமயத்தினர் உபயோகிக்கும் சின்னங்களும் அதன் பயன்களும் (சி.மயூரி), சமய விழாக்கள் சமயத்திற்கு ஆற்றும் தொண்டு (G.சுபோதினி), திரும்பிப்பார் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20928).