தி.அபராஜிதன் (இதழாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி கல்வி வலயம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறிண்டேர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி).
xi, 60 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
சாவகச்சேரி, தென்மராட்சிக் கல்வி வலயம் கடந்த 2014.08.10இல் தென்மராட்சிக் கலை மன்றத்தில் நிகழ்த்திய முழுநிலா நாள் கலைவிழாவின் கலை ஆற்றுகைகள், கலைப் படைப்புகளின் விளக்கங்களையும் கட்டுரைகளையும் புகைப்படப் பதிவுகளையும் தாங்கியதாக வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். ஆசிச் செய்திகள் வாழ்த்துரைகளுடன் இம்மலரில் ஆடித் திங்கள் முழுநிலா நிகழ்ச்சியின் தலைமையுரையின் வரிவடிவங்கள் (சு.கிருஷ்ணகுமார்), முழுநிலா நாள் கலைவிழா மனப் பதிவுகள் சில (பேராசிரியர் அருணாசலம்), ஆடல் பாடலுடன் ஆர்ப்பரித்த ஆடித்திங்கள் முழுநிலா நாள் கலைவிழா (தி.அபராஜிதன்), பௌர்ணமி தினம் (க.க.ஈஸ்வரன்), ஆடித்திங்களுக்கு அழகு சேர்த்த அன்பினைந்திணை பற்றிய ஒரு பார்வை (திருமதி வளர்மதி நகுலேஸ்வரதாசன்), ஆடித்திங்கள் முழுமதிநாளில் சங்கமித்த கிராமியக் கலைகளும் நாட்டார் மரபுகளும் (க.குணரத்தினம்), நாட்டியக் கலையில் ஹஸ்தாபிநயம் (திருமதி வி.சுனில் ஆரியரட்ணா), கானாப் பாடல்கள் (கு.ஜோதிரட்ணராசா), தமிழிற் பெருநீதி (வே.உதயகுமார்), தென்மராட்சி வலயக் கல்விச் சமூகத்தின், ஆடித்திங்கள் முழுநிலா நாள் கலைவிழா – 2014 (எஸ்.விஜி), நெஞ்சம் நிறைந்து பெருமை கொள்ள வைத்த முழுநிலா நாள் கலைவிழா (சந்திரா) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.