மலர் வெளியீட்டுக் குழு. பிரித்தானியா: லிவர்பூல் தமிழ்க் கல்விக் கூடம், The de la Salle Academy, Carr LN E, Croxteth, Liverpool L11 4SG, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(84) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
பிரித்தானியாவின் லிவர்ப்பூல் நகரில் 2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்க் கல்விக் கூடத்தின் பத்தாவது ஆண்டு மலர். இதில் மேற்படி தமிழ்ப்பள்ளியில் கற்றுத் தேர்ந்த மாணவர்களின் ஆக்கங்கள் அவர்களின் கைப்பட எழுதித் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், அப்பள்ளியின் கடந்த பத்தாண்டுப் பயணத்தின் புகைப்பட சாட்சியங்களும் வரலாற்றுக் குறிப்புகளும், வாழ்த்துரைகளும், ஆசிரியர், மாணவர்களின் புகைப்படங்களும் வர்த்தக விளம்பரங்களும் இடம்பெற்றுள்ளன.