எஸ்.இராமர் (இதழாசிரியர்). கொட்டகலை: கல்விக் கழகம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, ஜுலை 2018. (ஹட்டன்: விவி கார்ட்ஸ்).
xviii, 279 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-955-3536-00-6.
கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் 24ஆவது நூல் வெளியீடாக ஆசிரிய மாணவர்களினதும் சிரேஷ்ட விரிவுரையாளர்களினதும், பல்வேறு அறிஞர்களினதும் எழுத்தாக்கங்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஆய்வுகள், விமர்சனங்களெனப் பல ஊற்றுக்களை ஒன்றாகத் தொகுத்து பொங்கிப் பிரவாகிக்கும் ‘கலையருவ’ யாகப் படைத்துள்ளனர்;. கலாசாலையின் கடந்துபோன 39 வருடங்கள், வேலை உலகில் பெண்களும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும், தேசிய பொதுக் கல்வி முன்மொழிவுகளும் ஆசிரியர் வாண்மைத்துவமும், உளவியல் விருத்தியில் உளவியல் ஆய்வு முறைகளின் வகிபாகம், பாடசாலை முகாமைத்துவ சவால்களும் உத்திகளும், பல்லூடகப் பண்பாட்டின் அனுகூலங்களும் வரையறைகளும், மாணவர்களை எவ்வாறு பரீட்சைக்குத் தயார் படுத்தலாம், ஆசிரியர் பணியும் உளவியல் கல்வியும், ஆசிரியர் வாண்மைத்துவ வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள், மக்கள் பண்பாடு, தமிழ் இலக்கணம் கற்பித்தல், ஆசிரிய தலைமைத்துவத்தின் வகிபங்குகள், பங்கேற்புச் செயற்பாடுகளினூடாக விளைதிறனுள்ள பாடசாலைகளை உருவாக்குதல், அறிவியல் கற்கைகள் துறைகளுக்கு உள்வாங்கப்பட வேண்டிய தமிழ் இலக்கிய அறிவியல் சிந்தனைகள், தமிழிலக்கிய வரலாற்றின் ஒரு புதிய பரிமாணம் புதுக்கவிதை, கல்வி, ஆசிரியராக அமைவது மாணவருக்கான வரப்பிரசாதமாகும், தென் ஆசிய நாடுகளில் கல்வி போதனை நுட்பங்கள், மாணவர்கள் இடைவிலகல், வகுப்பறைகளில் பன்முக வாசிப்பு, நடனமும் நாமும், இன்றைய மாணாக்கர்களும் போதை மயக்கமும், மலையகமும் நாட்டாரியலும், கல்வியும் சமுதாயமும், ஆசிரியர் பணி, மொழி, கல்வியின் முக்கியத்துவம், கலைத்திட்டத்தில் ஆரம்பக் கல்வி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம், தமிழர் பண்பாடு, பெண்ணியம்-திறனாய்வுகள், இலக்கியத் திறனாய்வு, பெண்ணியம், பெண்ணியத்தின் அடிமை: சங்ககாலம் முதல் தற்காலம் வரை, காந்தி மற்றும் பெரியார் பார்வையில் பெண் விடுதலை, பெண்ணுரிமை ஒரு நோக்கு, பெண்மையில் மிளிரும் நால்வகைக் குணங்கள், பெற்றோர் கண்கண்ட தெய்வங்கள், பக்தி இலக்கியம், தமிழர் பண்பாட்டு கலைகள், உட்படுத்தல் கல்வியின் அவசியம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளும், தொடர்ந்து சில கவிதைகளும் கௌரவம், கனவுகளைத் தேடி, அதிர்ச்சி, தெருநாய்கள், வாழ்க்கை வட்டம் ஆகிய சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.