17291 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் பட்டயக் கற்கை நெறி பட்டமளிப்பு விழாச் சிறப்பிதழ் (2015-2016).

கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

28 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5சமீ.

12.06.2016 அன்று நிகழ்த்தப்பட்ட பட்டமளிப்பு விழாவின் போது இச்சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பட்டயக் கற்கைநெறியின் புலமைக் குழுத் தலைவராக சபா.ஜெயராசா பணியாற்றியிருந்தார். புலமைக் குழுச் செயலாளராக சு.செல்லத்துரை பணியாற்றினர். தமிழறிவை ஆழ்நிலையிலும் அகல்நிலையிலும் கற்பிப்பதற்குரிய கலைத்திட்ட ஏற்பாடுகளுடன் ‘தமிழ்ப் பட்டயக் கற்கை’ நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது, மும்மொழித் திறனும் முத்தமிழ் கற்றலும் மிக்க  முதுபெரும் அறிஞர் ஆ.சபாரத்தினம் அவர்களுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ‘தமிழ்நிதி’ விருதளித்துக் கௌரவித்தது.

ஏனைய பதிவுகள்

Chill Odor Image

Blogs The ideal scent to own: Contains absolute natural oils: Get the buzz to the digital things Ringtail Love Evening – Black Love in the