கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, கார்த்திகை 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
38 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
22.11.2018 அன்று நிகழ்த்தப்பட்ட பட்டமளிப்பு விழாவின் போது இச்சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பட்டயக் கற்கைநெறியின் புலமைக் குழுத் தலைவராக சபா.ஜெயராசா பணியாற்றியிருந்தார். புலமைக் குழுச் செயலாளராக மா.கணபதிப்பிள்ளை பணியாற்றினர். ஓராண்டுக் கற்கை நெறியில், அடிப்படைத் தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கியப் பனுவல்கள், தொடர்பாடல் அடிப்படைகள், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழிபெயர்ப்பு ஆகிய ஆறு பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இந்நிகழ்வின்போது, தமிழ்மொழித் திறன் கொண்ட எழுத்தாளரும் ஆய்வாளருமான அருணா செல்லத்துரை அவர்களுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ‘தமிழ்நிதி’ விருதளித்துக் கௌரவித்தது.