கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).
40 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
29.02.2020 அன்று நிகழ்த்தப்பட்ட பட்டமளிப்பு விழாவின் போது இச்சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. ஆசிரியர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பயன்படத்தக்கதாகவும் தமிழ்ப் பட்டயச் சான்றிதழ்க் கற்கைநெறியொன்றை இச்சங்கம் 2013 தொடக்கம் நடத்தி வருகின்றது. தமிழ்ப் பட்டயக் கற்கைநெறியின் புலமைக் குழுத் தலைவராக சோ.சந்திரசேகரன் பணியாற்றியிருந்தார். புலமைக் குழுச் செயலாளர்களாக வ.மகேஸ்வரன், க.இரகுபரன் ஆகியோர் பணியாற்றினர். தமிழறிவை ஆழ்நிலையிலும் அகல்நிலையிலும் கற்பிப்பதற்குரிய கலைத்திட்ட ஏற்பாடுகளுடன் ‘தமிழ்ப் பட்டயக் கற்கை’ நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கற்கை நெறி ஒரு ஆண்டுப் பாடத்தைக் கொண்டது. அடிப்படைத் தமிழ் இலக்கணம், தொடர்பாடல் அடிப்படைகள், பழந்தமிழ் இலக்கியங்கள், இடைக்காலத் தமிழ் இலக்கியங்கள், நவீன தமிழ் இலக்கியங்கள், சிறிய அளவிலான ஒரு ஆய்வறிக்கை ஆகிய ஆறு பாடங்களை இப்பயிற்சித் திட்டம் கொண்டுள்ளது. மரபுவழித் தமிழ்ப் புலமையாளரும் பல்கலைக்கழகத்தினரும் கற்பித்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.