இரா.விஜயகுமார் (இதழாசிரியர்). வலப்பனை: கல்வியியலாளர் ஒன்றியம், ஹங்குராங்கெத்த, 1வது பதிப்பு, 2017. (இராகலை: அம்ருத்தா பதிப்பகம்).
xvi, 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17 சமீ.
ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் கல்வியியல் சார்ந்த 53 ஆக்கங்களை இச்சிறப்பிதழ் கொண்டுள்ளது. அறிவுப் பொருளாதாரம், சமூக மாற்றங்களை முன்னிறுத்திய ஆசிரியரின் வகிபாகம், மாணவர் பல்வகைமை, வினைத்திறன் மிக்க கற்றல், பாடசாலைகளில் பிரச்சினைகளைத் தீர்த்தலில் தலைமைத்துவத்தின் வகிபாகம், ஆசிரியர் பணியின் முக்கியத்துவம், கற்றல் இடர்பாடுடைய மாணவர்கள், ஆரம்பக் கல்வி வளர்ச்சியில் கணிப்பீடும் மதிப்பீடும், சூழல் பாதுகாப்பு, இலங்கையின் கல்வித்துறை வரலாறு என இன்னோரன்ன விடயப் பரப்புகளை இக்கட்டுரைகள் ஆராய்கின்றன.