மகாஜனா கல்லூரி பழைய மாணவர்கள். யாழ்ப்பாணம்: 1988 O/L, 1991 A/L அணி மாணவர்கள், மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, ஜுலை 2022. (பிரான்ஸ்: IMPRIMERIE RAS).
304 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21.5 சமீ.
பள்ளிக் காலத்தில் ஏற்படும் அனுபவங்கள் எப்போதும் இனிமையானவையாகவே அதிகம் இருக்கும். அதனாலேயே மனித மனங்கள் மறக்கமுடியாத அந்த இனிய சுகங்களை ஆயுள் வரையும் சுமந்து செல்கின்றன. அந்த நினைவுகளைச் சுமந்தபடி தான் இந்த ‘வாழ்வு தந்த மகாஜனா” மலரும் இங்கு மலர்ந்திருக்கிறது. இதன் மலர்க் குழுவில் திருமதி நீதிமதி யோகராஜன் (இலங்கை), தியாகராசா பரமேஸ்வரன் (இலங்கை), கந்தசாமி முகுந்தன் (இலங்கை), திருமதி தமிழினி வாமதேவன் (நியூசீலாந்து), சிவபாலன் பகீரதன் (அவுஸ்திரேலியா), திருமதி மஞ்சுளா பிரபாகரன் (சிங்கப்பூர்), அப்பையா தேவதாஸ் (ஜேர்மனி), கிருஷ்ணதுரை ஜெய்சந்தர் (பிரான்ஸ்), செல்வி தவராசா சந்திரமதி (பிரித்தானியா), உமாமகேஸ்வரம்பிள்ளை சுமுகன் (பிரித்தானியா), திருமதி குமுதினி சிறீதரன் (கனடா) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இதிலுள்ள மலரும் நினைவுகளான படைப்பாக்கங்கள் விருட்சத்தின் அடையாளம், மலர் மீது பூமாலைகள், மகாஜனாவின் மீகாமன்கள், ஆளுமை தந்த சிகரங்கள், துணை நின்ற விழுதுகள், விட்டுப் பிரிந்த குருவிகள், நினைவுத் துளிகள் எழுதிய வரிகள், ஆதரவுக் கரங்கள், தடம் பதித்தவர்கள், வாழ்க்கைப் பயணங்கள், நினைவு நிழல்கள் ஆகிய 11 பிரிவுகளின் கீழ் வகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.