17298 இடர்பாடு கொண்ட மாணவர்களின் நடத்தைகளில் உள-சமூகக் காரணிகளின் தாக்கம்.

விஷ்ணுவர்த்தினி பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

24 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-624-6601-07-2.

இந்நூல் ஆசிரியரின் 4ஆவது பிரசுரமாகும். நடத்தைக் குலைவுடைய மாணவர்களது நடத்தைக் குலைவுக்கான காரணத்தைக் கண்டறிந்து அவர்களை வழிப்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அறிமுகம், மாணவர்களின் உளநலம், வீடு-குடும்பம்சார் காரணிகளும் இடர்பாட்டு நிலையும், சமூகம்சார் காரணிகளும் இடர்பாட்டு நிலையும், இடர்பாடு கொண்ட மாணவர்களில் தாக்கம் செலுத்தும் பொதுவான காரணிகள், இடர்பாடு கொண்ட மாணவர்களின் நடத்தையும் பிரச்சினைகளும், விதப்புரைகள், நிறைவுரை ஆகிய உப தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பரணீதரன் விஷ்ணுவர்த்தினி உளவியற் கலைப் பட்டதாரி. யாழ்ப்பாணம் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். தற்போது யா/அடம்பன் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையிலும், யா/ மணற்காடு ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் ‘வழிகாட்டலும் ஆலோசனையும்’ பாட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 319ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Spinempire No-put Extra

Content Player’s detachment consult might have been put off. Large Trout Bonanza Slot Financial possibilities at the SpinEmpire Casino The new to play on line-website