17301 மாற்றுக் கல்வி.

சபா. ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு 2023. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

vi, 90 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-177-9.

சமூகத்திலும் கல்வியிலும் நெருக்கடிகள் மேலெழும் பொழுது மாற்றுக் கல்வி பற்றிய சிந்தனைகள்  வெளிவீச்சுக் கொள்கின்றன. பிரதான கல்விச் செயற்பாட்டின் குறைபாடுகளை நீக்குவதற்கும், நிறைவு செய்யப்படாத இடைவெளிகளை நீக்குவதற்கும் மாற்றுக்கல்வி கைகொடுக்கும் வழிமுறையாகின்றது. பிரதான கல்வி முன்னெடுப்புகளால் சமூகத்தின் அனுகூலம் மிக்க வகுப்பினரே கூடுதலான நன்மைகளை ஈட்டிக் கொள்கின்றனர். சமூகத்தின் விளிம்பு நிலையினர் அவற்றின் நலன்களைப் பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். கல்விக் கட்டமைப்பின் வர்க்க சார்புடைமை அத்தகைய ஏற்றத்தாழ்வை உருவாக்கிய வண்ணமுள்ளது. அத்தகைய பின்புலத்தில் மாற்றுக் கல்வி பற்றிய கருத்தாடல்களும் செயல்வடிவங்களும் மேற்கிளம்புகின்றன. அவற்றின் பின்புலத்தில் இந்நூலிலுள்ள 17 இயல்களும் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையின் கல்விப் பிரச்சினை, மாற்றுக் கல்வி: ஒரு முன்னோட்டம், மாற்றுக் கல்வி: நோக்கங்கள், செயற்படுத்தும் வழிமுறைகள், கட்புலனாகாக் கற்றலும் கற்பித்தலும், நிழற் கல்வி, மாற்றுக் கல்வியும் மாணவரும் நடத்தை நிலை, அறிகை நிலை, மனவெழுச்சி நிலை, சமூகநிலை, ஆசிரிய மீட்டுருவாக்கல், தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதில் மாற்றுக் கல்வி, அழகியல் உணர்வும் மாற்றுக் கல்வியும், மாற்றுக் கல்வியும் வறுமை ஒழிப்பும், மாற்றுக் கல்வியும் ஆதிக்க நீக்கமும், நெருக்கடி நிலையும் இணைய வழியான கற்பித்தலும், செயற்படுத்தும் முறைமை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்