சிவதொண்டர் (இயற்பெயர்: சண்முகம் திருஞானமூர்த்தி). அக்கரைப்பற்று-07: சண்முகம் திருஞானமூர்த்தி, நெசவு நிலைய முன் வீதி, 1வது பதிப்பு, 2016. (அக்கரைப்பற்று: சக்தி அச்சகம்).
38 பக்கம், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 21.x14.5 சமீ.
இந்நூலில் வேலுப்பிள்ளை சந்திரசேகரம் (ஆசியுரை), சிவஸ்ரீ இரா.சுந்தரமூர்த்தி ஐயர் (அணிந்துரை), வேதநாயகம் ஜெகதீசன் (வாழ்த்துரை), முல்லை வீரக்குட்டி(சிறப்புரை), சண்முகம் திருஞானமூர்த்தி (முன்னுரை/நன்றியுரை) ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து மரணக் கிரியை, துடக்கு, ஈமக்கிரியை, தந்தை இறந்தால் பாடக்கூடிய பாடல்கள், தாய் மரணமடைந்தால் பாடக்கூடிய பாடல்கள், மோட்ச மாலை, அரும்பதங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117557).