மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
iv, 51 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
யாழ்ப்பாணப் பிரதேசச் செயலகத்தின் கலாசாரப் பேரவையினால் கலாசார விழாக்களில் மேடையேற்றப்பட்ட ‘யாழ் பாடி’, ‘சாம்ராட் அசோகன்’ ஆகிய இரண்டு கூத்துக்களின் எழுத்துரு இங்கே நூலுருவாக்கப்பட்டுள்ளது. ‘யாழ்பாடி’ நாட்டுக்கூத்து 2011ஆம் ஆண்டு கலாசாரப் பேரவையினால் மேடையேற்றப்பட்டது. இதன் எழுத்துருவாக்கத்தை மேற்கொண்டவர் அண்ணாவியார் அ.பாலதாஸ், அண்ணாவியார் பிரான்சிஸ் யூல்ஸ் கொலின் ஆகியோராவர். ‘சாம்ராட் அசோகன்’ நாட்டுக்கூத்து 2008ஆம் ஆண்டு கலாசாரப் பேரவையினால் மேடையேற்றப்பட்டது. இதன் எழுத்துருவாக்கத்தை மேற்கொண்டவர் கவித்தென்றல் எஸ்.ஏ.அழகராஜா (யாழ்.ஊர் அழகன்) அவர்களாவார்.