எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6601-37-9.
கிராமியப் பாடல்களை நாம் ‘நாட்டார் பாடல்’ அல்லது ‘நாட்டுப்புற பாடல்’ என்றழைப்போம். நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற் களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை(நடவு) மற்றும் ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்தக் காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொலிக்கும். இலங்கைக் கிராமங்களில் வழங்கும் இத்தகைய பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து அதனை ரசனைமிக்க கட்டுரையாக இந்நூலில் வழங்கியுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 413ஆவது நூலாக வெளிவந்துள்ளது.