17309 பொருகளம்: வடமோடிக் கூத்து.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). தமிழ்நாடு: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி 8, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600014: பிரின்ட் பிராசஸ்).

Lvii, 364 பக்கம், விலை: இந்திய ரூபா 450., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-91728-15-4.

போரில் எதிர்பார்க்கப்படுகின்ற தர்மங்கள் மீறப்பட்டாலும், வேறு வகையிலும் வஞ்சனையான முறையிலே கொல்லப்பட்ட பாத்திரங்கள் ஈழத்துக் கூத்துக்களிலே முதன்மை பெறுகின்றன. பதினெட்டு நாட்களாக இடம்பெற்ற மகாபாரதப் போரிலே இறுதி ஆறுநாட்போரும் அவ்வாறான வஞ்சனைகளுக்கு வழிசமைத்துத் தந்தனவாய் அமைந்துள்ளன. போரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் அமைந்தனவும் வஞ்சகம் நிறைந்தனவுமான அந்தப் போர்கள் பாமர மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. அத்தாக்கத்தின் வெளிப்பாடாக அமையும் மூன்று வடமோடிக் கூத்துக்கள் பொருண்மையளவில் பொருத்தமுடையன-ஒப்புமை உடையன என்ற எண்ணத்தின் அடிப்படையில் ‘பொருகளம்’ என்ற பெயரிலே தொகுத்துத் தரப்படுவது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். பொருண்மையால் மாத்திரம் அன்றி, பிராந்திய அடிப்படையில் இக்கூத்துக்கள் மட்டக்களப்புக்கு உரியன. பாங்கின் அடிப்படையில் வடமோடிக் கூத்துக்கள் என்ற ஒப்புமையும் இந்த மூன்று கூத்துக்களுக்கு இடையிலும் உண்டு. இதுவரை எவராலும் மேற்கொள்ளப்படாத வகையிலே இத்தகையதொரு தொகுப்பு நூலைத் தயாரித்து பொருத்தமான வகையிலே அதற்குப் ‘பொருகளம்’ என்று பெருமிட்டுத் தமிழுக்கு நல்கும் கலாநிதி முருகு தயாநிதி அவர்களின் பணி பயன்மிக்கது. முகவுரை, ஆய்வுப் பதிப்புரை, அபிமன்யு போர் (13ஆம் நாள் போர், 14ஆம் நாள் போர்), துரொணர் போர் (15ஆம் நாள் போர், 16ஆம் நாள் போர்), கர்ணன் போர் (17ஆம் நாள் போர், 18ஆம் நாள் போர்) ஆகிய பிரிவுகளின் கீழ் இவ்வாய்வு ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்