சபா ஜெயராசா. கொழும்பு 6: இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம், இல.09- 2/1, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founder Street).
xx, 21-172 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-98910-5-0.
கலைச்சொல்லாக்கம் என்பது தனித்துவமான ஒரு கலை. அறிவு பெருக்கெடுத்து வரும் நிலையில் அதனை வெளிப்படுத்தும் புதிய கலைச் சொற்களும் உருவாக்கம் பெற்று வருகின்றன. ஆங்கில மொழி உலக அறிவுப் பிரவாகத்தை கையளிக்கும் செயற்பாட்டில் முதன்மை நிலையில் உள்ளது. அந்த மொழியில் உள்ள கலைச் சொற்களுக்குத் தமிழ் வடிவம் கொடுக்கும் முயற்சி இந்நூலாக்கத்தில் இடம்பெற்றுள்ளது. உடனடித் தேவை கருதி தெரிவு செய்யப்பட்ட கலைச்சொற்களே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் இலக்கியக் கலைச்சொற்கள், திறனாய்வுத்துறைக் கலைச்சொற்கள், சமூக பண்பாட்டுக் கலைச்சொற்கள், தொடர்பியற் கலைச்சொற்கள், இனச்சால்பியக் கலைச்சொற்கள், கல்வியியல் கலைச்சொற்கள், நடைமுறை உளவியற் கலைச்சொற்கள், நிகழ் பயன்பாட்டுக் கலைச்சொற்கள், வளர்தொழில் வழிகாட்டல் கலைச்சொற்கள், பொதுவியல் ஆகிய பத்துப் பகுதிகளாகப் பிரித்து அவ்வப் பகுதிகளுக்குப் பொருத்தமான கலைச்சொற்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.