17317 உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்: 13ஆவது பன்னாட்டு மாநாட்டு மலர் 2017.

பாஞ்.இராமலிங்கம் (பதிப்பாசிரியர்). கனடா: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இணை வெளியீடு, தமிழ்நாடு: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி 8, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (சென்னை 600 014: திருமலை ஆப்செட் பிரின்டர்ஸ்).

416 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5,6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் 13ஆவது பன்னாட்டு மாநாட்டை நடத்தியிருந்தனர். இம்மாநாட்டு நிகழ்வுக்கு பல்வேறு அரசியல்வாதிகளினாலும் சமூகப் பிரமுகர்களாலும் வழங்கப்பட்ட வாழ்த்துரைகள், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பற்றிய செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றுடன், தமிழியல் சார்ந்த 28 கட்டுரைகளும், 9 தமிழ்க் கவிதைகளும், இரு ஆங்கிலக் கட்டுரைகளும், மாநாட்டில் பங்கேற்கும் பேராளர்கள் பற்றிய விபரங்களும் இடம்பெற்றுள்ளன. மாநாட்டு மலர்க்குழுவில் வி.சு.துரைராசா, துரை கணேசலிங்கம், மாவை சோ.தங்கராஜா, தே.செந்தில்வேலவர், இ.இராஜசூரியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்