17320 அப்பாவின் கை (2.1).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-04-5.

அப்பாவின் கை பெரிய கை, அப்பாவின் கை எனக்கு உணவூட்டும், அப்பாவின் கை என்னை அன்புடன் அணைக்கும், அப்பாவின் கையைப் பிடித்தபடி நான் நடப்பேன். அப்பாவின் கை நான் விழுந்துவிடாமல் பாதுகாக்கும், அப்பாவின் கையைப் பிடித்திருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் எனப் பிஞ்சு மகள் வாஞ்சையுடன் தன் அப்பாவின் கையை நினைந்து மகிழ்கிறாள். இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 2.1 ஆகும்.

ஏனைய பதிவுகள்

a hundred Totally free Spins

Blogs In which Do i need to Have the Most recent a hundred Free Spins No deposit Extra Requirements? Tips Allege Your Free Revolves Added