17329 என் கைகளால் என்ன செய்யலாம்? (1.2).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-05-2.

‘என் கைகளால் என்ன செய்யலாம்?’ என்ற கேள்விக்கு பாலர்களிடம் இருந்து பெறப்படும் பதில்கள் இவை. முகம் கழுவலாம், உடுப்புப் போடலாம், சாப்பாடு சாப்பிடலாம், படம் கீறலாம், நிறம் தீட்டலாம், கதை எழுதலாம், பாட்டுக் கேட்கும்போது கைதட்டலாம், அப்பாவுக்குக் கையசைக்கலாம், சினேகிதியுடன் கைகுலுக்கலாம், அம்மாவைக் கட்டிப்பிடிக்கலாம், மணல்வீடு கட்டலாம், ஆனால் எவரையும் அடிக்கக்கூடாது. யாரையும் கிள்ளவும் கூடாது. ஒருவரையும் தள்ளவும் கூடாது. அப்படிச் செய்வது மற்றவர்களைக் காயப்படுத்தும். எனவே, நான் அவற்றைச் செய்யமாட்டேன் என்று ஒளிப்பட விளக்கங்களுடன் இந்நூல் பதிவுசெய்கின்றது. இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 1.2 ஆகும்.

ஏனைய பதிவுகள்

5 Better Online casinos

Content Best Online gambling Software In the usa Who’s The largest No deposit Added bonus? Finest Incentives The real deal Money Online gambling Naturally, there