17331 எனது குடும்பம் (1.3).

பூங்கோதை (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-14-4.

நேசன் என்ற ஒரு சிறுவன் தன் தாயாரையும், தந்தையையும், அண்ணாவையும், அக்காவையும், தங்கையையும், தம்பியையும் ஒளிப்படங்களின் மூலம் அறிமுகப்படுத்துகின்றான். இந்த வாசிப்பு அனுபவத்தின் மூலம் சிறார்கள் தமது உறவுமுறைகள் பற்றி அறிகிறார்கள். இந்நூலின் வாசிப்பு மட்டம் 1.3 ஆகும். மாணவர்களுக்கு இக்கதையின் வழியாக பல புதிய தமிழ்ச் சொற்கள் புகட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. கல்வித்துறைப் பட்டதாரியான நூலாசிரியர் பூங்கோதை, இலங்கையிலிருந்து 1989இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் பெற்றோருடன் புலம்பெயர்ந்து சென்றவர். அங்கு அரச பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Spaceman Demonstration Slot

Blogs Apa Saja Keunggulan Bermain Trial Position Gates Of Olympus Dari Practical Play? Arcane Reel In pretty bad shape Finest Microgaming Gambling establishment Sites That