17332 ஐம்புலன்களும் நாமும் (2.1).

பூங்கோதை (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-15-1.

கல்வித்துறைப் பட்டதாரியான நூலாசிரியர் பூங்கோதை, இலங்கையிலிருந்து 1989இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் பெற்றோருடன் புலம்பெயர்ந்து சென்றவர். அங்கு அரச பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். இந்நூலின் வாசிப்பு மட்டம் 2.1 ஆகும். பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய சொற்களை இந்நூல் விபரிக்கின்றது. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூல் தயாரிப்பில் அனுஷா, மேகலா, பூங்கோதை, ஸ்ரீரஞ்சனி, வைதேகி ஆகிய ஐந்து எழுத்தாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நூல்கள் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இலக்கியங்களை உருவாக்கும் ஸ்டெம்-கல்வி அறக்கட்டளையின் ‘1000 வாசிப்புப் புத்தகங்கள்’ செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நூல்கள் 2022இல் நடத்தப்பட்ட UNICEF ஆய்வை அடிப்படையாக வைத்து பாடசாலைகளில் எழுத்தறிவு வீதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அத்துடன் இந்நூல்கள் 01 தொடக்கம் 35 வரை படிப்படியாக அதிகமான சொற்களை உள்வாங்கி 35ஆவது நூலை வாசித்து முடிக்கும்போது மொத்தமாக 4300 சொற்களை ஒரு மாணவர் உள்வாங்கியிருப்பார்.

ஏனைய பதிவுகள்

Cleopatra Free Slots Play

Content Different Types Of Free Slot Games – la dolce vita slot jackpot Step 1: Create A Slots Site Account Top Classic Slot Games How

Joga Nas Melhores Slot Machines Online

Content Constatação Pressuroso Aparelhamento Dicas E Truques Para Anexar Tua Entretenimento Na Slot Que Apostar Os Slots Online: Estatísticas Dos Cassinos Criancice Pg Soft Faça