17333 கடற்கன்னிகளும் கடற்புறாக்களும் (3.1).

பூங்கோதை (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-16-8.

கடற்கரை ஓரத்தில் தன் குடும்பத்தினருடன் இன்பமாக வாழும் ஒரு கடற்புறாவின் பார்வையில் மனிதர்களால் கடலில் வீசப்படும் குப்பைகளால் கடல் உயிரினங்களுக்கு நேரும்  இன்னல்கள் பற்றி விழிப்புணர்வூட்டப்படுகின்றது. அப்பிரதேச மீனவர்களின் சுத்திகரிப்புப் பணிகளுக்கு கடற்புறாவும் தன் குடும்பத்தை ஈடுபடுத்துகின்றது. இக்கதையில் கடற்கன்னிகள் கடலன்னையாக உருவகிக்கப்படுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 3.1 ஆகும். மாணவர்களுக்கு இக்கதையின் வழியாக பல புதிய தமிழ்ச் சொற்கள் புகட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின் மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. கல்வித்துறைப் பட்டதாரியான நூலாசிரியர் பூங்கோதை, இலங்கையிலிருந்து 1989இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் பெற்றோருடன் புலம்பெயர்ந்து சென்றவர். அங்கு அரச பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Asgardian Stones Games Comment 2024

Content Choice Versions, RTP and you may Variance Volatility Asgardian Stones RTP and Volatility Asgardian Stones Position Comment & 100 percent free Trial Enjoy When