வைதேகி ஜெயக்குமார்; (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).
16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-34-2.
கனிமொழியும் அவளது மஞ்சள் நிற கரடி பொம்மையும் இக்கதையின் பாத்திரங்கள். கனிமொழிக்கு நிலவைப் பிடித்திருப்பதால் அந்தக் கரடிப் பொம்மைக்கும் நிலா என்று பெயரிடுகிறாள். இருவரும் தண்ணீரில் குளித்து விளையாடுவார்கள். கனிமொழிக்கு நிலாவை அலங்கரிப்பது மிகவும் பிடிக்கும். நிலாவுக்கு வண்ண ஆடைகள் அணிந்து அழகு பார்ப்பாள். தான் உண்ணும் போது நிலாவுக்கும் உணவு பரிமாறுவாள். இரவில் அம்மாவிடம் கதைகேட்கும் போது கூட நிலா கனிமொழியுடனேயே சேர்ந்து கதை கேட்கும். கனிமொழி தூங்கும் வேளை நிலாவும் தூங்கிவிடும். மழலைகளுக்கும் அவர்களின் பொம்மைகளுக்கும் இடையே உள்ள ஆத்மார்த்த உறவை இக்கதை பேசுகின்றது. இந்நூலாசிரியர் வைதேகி இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நியூசிலாந்தில் வாழ்ந்து வருகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின் மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 2.2ஆகும்.