17337 காலத்தினாற் செய்த நன்றி (4.2).

அனுஷா ஸ்ரீதரன் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-30-4.

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் 102)’ என்ற திருவள்ளுவரின் குறள் கூறும் படிப்பினையை இக்கதை வழியாக அபி என்ற சிறுமியின் மனதில் ஆசிரியர் பதிய வைத்துள்ளார். இந்நூலாசிரியர் அனுஷா கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். பின்னாளில் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கு மெல்பர்னில் வாழ்ந்து வருகின்றார். இவர் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 4.2 ஆகும்.

ஏனைய பதிவுகள்

Better Wager

Blogs Both for Experienced Gamblers And you can Hockey Fans Nba Picks And you can Forecasts Including, whenever bullet five become between Kamaru Usman and