17340 தேன் சொரியும் பூ (3.1).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-08-3.

தன் வீட்டில் பூத்திருந்த சிவப்பு ரோசாப்பூவிலிருந்து ஒரு தேனீ அமர்ந்து தேனைச் சேகரிப்பதில் தொடங்கி, வீட்டில் அச்சிறுவன் தன் ஆகாரத்தின்போது பாண் துண்டில் பட்டரையும் தேனையும் சேர்த்துப் பூசிச் சாப்பிடுவது வரையிலான ஒரு தொடர் செயற்பாட்டின் படிமுறைகளினூடாக இயற்கை வழியில் தேனின் உருவாக்கத்தையும் அதன் மனிதப் பயன்பாட்டையும் எளிமையான சொற்களின் வாயிலாகச் சிறுவர்களின் மனதில் பதிவுசெய்யும் முயற்சி இது. இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 3.1 ஆகும்.

ஏனைய பதிவுகள்

Sports communication fraud NHL Betting

Articles Incentives & promotions Football Correspondence dumps and you may withdrawals Try Sports Interaction Courtroom on the Remainder of Canada? Activities Communication Opinion The fresh