17341 நிலாவின் விடியல் (3.1).

சிறீரஞ்சனி (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-10-6.

மனித வாழ்க்கையில் விபரிக்க முடியாத உணர்வுச் சிக்கல்களை பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளத் தெரியாத சிறுவர் பராயத்தில் பெற்றோர் அதனை எவ்வாறு புத்திசாதுர்யமாக எதிர்கொள்கிறார்கள் என்பதை அழகாக உணர்த்தும் நூல். இந்நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா கனடாவில் ரொரன்ரோ மாவட்ட பாடசாலை சபையின் நிர்வாகத்தின் கீழ் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. இந்நூலின் வாசிப்பு மட்டம் 3.1 ஆகும்.

ஏனைய பதிவுகள்

Online Casino Real Money

Online live casino オンラインカジノ ペイパル Online Casino Real Money Our in-depth casino reviews and recommendations would not be possible without the hard work of our