நாகமுத்து பிரதீபராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2022. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
xxvi, 218 பக்கம், விலை: ரூபா 1600., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-170-0.
அனர்த்தத்துக்கான அறிமுகம், அனர்த்த முகாமைத்துவ வட்டம், அனர்த்த தணிப்பு, அனர்த்தப் பொறுப்புக் கூறல், அனர்த்த மீட்பு, அனர்த்தத் தயார்ப்படுத்தல், அனர்த்த விழிப்புணர்வும் அனர்த்த முகாமைத்துவமும், அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகளில் ஊடகங்களின் பங்கு, இலங்கையும் அனர்த்த முகாமைத்துவமும், அனர்த்த முகாமைத்துவத்தில் சமூகம் சார்ந்த அணுகுமுறை, பிரத்தியேகமான அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், புவியியல் தகவல் தொழில்நுட்பமும் அனர்த்த முகாமைத்துவமும் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். இத்துறையில் கடந்த 16 ஆண்டுகளாக காலநிலையியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் போன்ற பாடங்களைக் கற்பிக்கின்றவராகவும் அதே பாட விடயப் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்பவராகவும் பணியாற்றி வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41449).