எஸ். கிருபானந்தகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
136 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-98-7.
ஆசிரியரின் முதலாவது நூல். 2013களில் தினக்குரல், உதயன், ஜீவநதி போன்ற தமிழ்ப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த 18 விலங்கியல் நடத்தை சார் சூழலியல் கட்டுரைகள் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கரடி வாழ்க்கை, நெடுந்தீவில் குதிரைகள், பெரஹரவும் யானைகளும், காட்டுப்பன்றி புராணம், சேவல் கட்டு, மாடுகளின் பால் கூறும் செய்தி, சிறுத்தைகள், செல்லப் பிராணிகளின் பூர்வீகம் தேடி, இலங்கையின் யானை – மனித முரண்பாடுகளும் தீர்வுகளும், வேட்டையாடுதல், அழுங்கின் அவலம், விலங்குகளைக் கொல்லும் வீதி விபத்துக்கள், விலங்குகளுக்கு எமனாகும் பொலித்தீன், மயில்களும் மனிதனும், நெதுங்கமுவே அத்தா, கழுதைகளும் சஞ்சரித்தல், குரங்குகளின் இராச்சியம்-ஒரு மூதாதையின் பாதை, சிறுத்தைகளின் மரண சாசனங்கள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 277ஆவது நூலாக வெளிவந்துள்ளது. சிவபாதசுந்தரலிங்கம் கிருபானந்தகுமாரன், இலங்கையில் அரச கால்நடை வைத்தியராகப் பணியாற்றுபவர். 2013ஆம் ஆண்டு முதல் இலங்கையின் ஊடகங்களில் விலங்குகள், கால்நடை மருத்துவம், கால்நடை உற்பத்தி தொடர்பான பல கட்டுரைகளை எழுதிவருபவர்.