எஸ்.டீ.ஆர்.கே. விஜேரத்ன (மூலம்), உ.நவரட்ணம் (பதிப்பாசிரியர்). மஹரகம: தொலைக்கல்வித்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1992. (மஹரகம: P & A Printers and Publishers).
80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
இது விளையாட்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கல்விப்பாடநெறி. அறிமுகம், குறிக்கோள்கள், முற்சோதனை, என்புத் தொகுதியின் அமைப்பும் அதன் தன்மையும், சக்தி உற்பத்திக்கும் பிரயோகத்திற்கும் உதவும் தொகுதிகள், ஏனைய உறுப்புத் தொகுதிகளின் அமைப்புத் தன்மை, தசைநார்த் தொகுதி, பல்வேறு தொகுதிச் செயற்பாடுகளின் சுருக்கம், பொழிப்பு, பிற்சோதனை, ஒப்படைகள், விடைகள் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாளர் குழுவில் த.ம.தேவேந்திரன், பொ.திருநாவக்கரசு, எப்.எஸ்.ஏ.சறூர், செனஹல தா.சேனாநாயக்க, எஸ்.கே.அபேகோன், ஜே.எம்.எஸ். திஸாநாயக்க, பீ.டீ.எச். ராஜபக்ஷ, சந்திரா ஹெம்மாதகம ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34376).
இந்நூலில் ஆதிகாலத்தில் பண்டைய நகரங்களிலும், நாடுகளிலும் மருத்துவமும் தாதியமும் எவ்வாறு தோற்றம் பெற்று வளர்ந்தது எனவும் நோய், சிகிச்சை, பராமரிப்பு பற்றிய மக்களின் நம்பிக்கைகள், சமயங்களின் செல்வாக்கு, அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் என்பன இத்துறையை வளம்படுத்திய பாங்கு என்பன விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் நைற்றிங்கேல் வாக்குறுதி, புராதன கால மருத்துவம், தாதியம் ஒரு தொழிலாக, தாதியத்தில் சமயங்களின் பங்கு, இலங்கைத் தாதிய சேவை, கனடா தாதிய சேவை, அமெரிக்க தாதிய சேவை, அவுஸ்திரேலிய தாதிய சேவை, இந்திய தாதிய சேவை, புளோரன்ஸ் நைற்றிங்கேல், சர்வதேச தாதியர் சங்கம், இலங்கை தாதியர் சங்கம் ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் இலங்கையில் பல தாதிய மாணவர்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்தவர். இவரது மாணவர்கள் இலங்கை முழுவதும் மதிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இவரது பல வருட கற்பித்தல் அனுபவங்கள், அறிவுத்தேடல்களின் விளைவாக இந்நூல் உருவாகியுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67157).