க.சுகுமார். சுழிபுரம்: வட பிரதேச நல்லொழுக்கச் சம்மேளனம், 1வத பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: கொமேர்ஷியல் பிரின்டர்ஸ்).
14 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
‘போதை’ என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகளின் தொகுப்பொன்றினை வி.பி.ரகுவரன் அவர்கள் தொகுத்து பலாலி ஆசிரியர் கலாசாலை விஞ்ஞான மன்ற வெளியீடாக ஒக்டோபர் 1989 இல் வெளியிட்டிருந்தார். அந்த நூலில் போதைப் பொருட்கள் (க.சுகுமார்), பாலியல் நோய்கள் (க.சுகுமார்), புகைத்தற் பழக்கம் (எம்.கே.முருகானந்தன்), மதுப் பழக்கம் (பெ.ஜேசுதாசன்) ஆகிய நான்கு கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இதில் வெளியாகியிருந்த க.சுகுமார் அவர்களின் ‘போதைப் பொருட்கள்’ என்ற தலைப்பிலான கட்டுரையின் நூல் வடிவம் இதுவாகும். போதைப்பொருள் பாவனையால் தோன்றக்கூடிய ஆபத்தை எடுத்துக்கூறி புத்திமதி புகட்டுதல் இக்கட்டுரையின் நோக்கமாகவுள்ளது. நூலை மேலும் தெளிவாக்குவதற்கேற்ப விளக்கப்படங்கள் தரப்பட்டுள்ளன.