ஆ.ஜென்சன் றொனால்ட். கொடிகாமம்: நட்சத்திர மஹால், ஏ-9 வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
94 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98956-4-5.
உணவு பாதுகாப்பு, உணவின் மூலம் பரவும் நோய்கள், உணவு நஞ்சாதல், உணவுமூலம் பரவும்நோய்கள் ஏற்படுவதற்காக அதிகளவில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள், உணவு நஞ்சாதலைத் தடுக்கவும் உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கவும் உணவு பாதுகாப்பின் பிரதான படிமுறைகள், கை கழுவுதல், இரசாயன ரீதியான ஆபத்துக்கள், பௌதிக ரீதியான ஆபத்துக்கள், நுண் உயிரியல் ரீதியான ஆபத்துக்கள், தவிர்க்கப்படவேண்டிய உணவுச் சேர்மானங்கள், அனுமதிக்கப்பட்ட உணவுச் சேர்மானங்கள், குறுக்குத் தொற்று/ மாசுபாடு, உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துபவை, உணவு கையாளுவதில் அடங்கும் நல்ல பழக்கங்கள், உணவு கையாளும் நிலையத்திற்கான பராமரிப்பு, குளிரூட்டியின் பராமரிப்பு, தனிநபர் பாதுகாப்பு அங்கிகள், காவிக் கட்டுப்பாடு, கழிவு முகாமைத்துவம், ஊழியர்களுக்கான பயிற்சி, உணவுகளை கொண்டுசெல்லல், பதிவுகளைப் பேணுதல், உணவு கையாளும் இடங்களில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த கவனிக்கப்பட வேண்டிய சில உத்திகள், நல்ல உற்பத்தி மற்றும் கையாளுதலுக்கான சான்று பெறுதல், நல்ல சுகாதார நடைமுறைகள், Hazard Analysis Critical Control Points (HACCP), பாதுகாப்பான நீர், உணவு பழுதடைந்துள்ளதா என இனங்காணல், உணவு கையாளும் வளாகங்களை நடத்துவதற்காக பெற்றுக்கொள்ள வேண்டிய அனுமதிகள், உணவு (வளவுகளைப் பதிவுசெய்தல்) ஒழுங்கு விதி- 2019, உணவு கையாளும் நிலையங்களை மதிப்பீடு செய்தல், உணவுச் சட்டத்தின் படி தற்போது நடைமுறையில் உள்ள ஒழுங்குவிதிகள், அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களினதும் அதிகாரிகளினதும் செயற்பாடுகள் ஆகிய 33 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் ஒரு பொது சுகாதாரப் பரிசோதகராவார்.