17368 நாம் தொற்றுநோய்களை அழைக்காதிருப்போம்.

அறிவுள்ள சமூகமொன்றுக்கான கல்வி செயற்றிட்டம். பத்தரமுல்ல: கல்வி அமைச்சு, அறிவுள்ள சமூகமொன்றுக்கான கல்வி செயற்றிட்டம், இசுருபாய, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

32 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

எமது சுற்றாடலில் கிருமிகள் வளரக்கூடிய நிலைமைகளை ஏற்படுத்தாமல் நாம் கவனமாக நடந்துகொள்ளல் வேண்டும். அத்தகைய வழிகளை இந்நூல் எமக்குத் தெரிவிக்கின்றது. சூழலை சுத்தமாகப் பராமரித்தல் (மல சலம் கழிப்பதற்கு மலசல கூடத்தைப் பயன்படுத்துதல், நீர், வளிமண்டலத்தை மாசடையச் செய்யாதிருத்தல், குப்பைகளை எரித்தல், குழிதோண்டிப் புதைத்தல், மீள்சுழற்சிக்கு உட்படுத்தல்), நோய்க்கிருமிகள் பெருகுவதைத் தடுத்தல் (கிருமிகள் பெருகும் இடங்களை அகற்றுதல், நாய் போன்ற வீட்டுப் பிராணிகளுக்கு ஒழுங்காக நோய் எதிர்ப்பு ஊசிகளை வழங்குதல்), உணவுச் சுகாதாரம் (மரக்கறி, பழங்களை குறிப்பாக பச்சையாகச் சாப்பிடும்போது நன்றாகக் கழுவுதல், உணவுகள் நோய்க்கிருமிகள் தொற்றாது பாதுகாத்தல், உணவு உண்ணும்போது கை கழுவுதல் போன்ற சுகாதார பழக்கங்களை கொண்டிருத்தல்), தனியாள் சுத்தம் (வீட்டுச் சூழலில் பாதணிகளை அணிந்திருத்தல், உணவுக்கு முன்னும் பின்னும் சவர்க்காரமிட்டு கைகளை நன்கு கழுவுதல், மலசலங்களைக் கழித்த பின்னர் நன்கு சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுதல்) ஆகியவற்றை பேணும் அவசியம் பற்றிய விளக்கத்தை இச்சிறுநூல் உரிய விளக்கப்படங்களின் வாயிலாக எளிமையாக வழங்குகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 88932).

ஏனைய பதிவுகள்

16141 சிவபெருமானலங்காரம் (மூலம்).

ம.முத்துக்குமாரசாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.சோமசுந்தர ஐயர், புலோலி பசுபதீசுர சுவாமி கோவில், புலோலி, 3வது பதிப்பு, பங்குனி 1940, 1வது பதிப்பு 1879, 2வது பதிப்பு, ஆங்கீரச வருடம் 1932, (யாழ்ப்பாணம்: இலங்கைநேச முத்திராஷரசாலை).