அனுருத்த பாதெனிய, நெத்மினி தேனுவர, லசந்த விஜயசேகர. கொழும்பு: சுகாதார போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, கல்வி அமைச்சு, யுனிசெப் (UNICEF) இன்னும் பிற, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
vi, 48 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-1928-15-5.
இந்நூல் இலங்கையின் சுகாதார போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, கல்வி அமைச்சு, யுனிசெப் (UNICEF), புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபை (NATA), இலங்கை மருத்துவ போஷாக்கு நிறுவனம் (SLMNA), சுகாதாரக் கல்விப் பணியகம் (HEB), தொற்றா நோய்களுக்கான பிரிவு (NCD Unit), தொற்றா நோய்களுக்கான பணியகம் (NCD Bureau), இலங்கை சமுதாய மருத்துவ நிபுணர்கள் கல்லூரி (CCPSL), சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான நிறுவனம் (SHRI), அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த வெளியீடாகும். நல வாழ்விற்கான குடிநீர், நல வாழ்விற்காக ஆரோக்கியமாக உண்ணுங்கள், நல வாழ்விற்காக சுறுசுறுப்பாக இருங்கள், நல வாழ்விற்கான சிறந்த உள ஆரோக்கியம், குடும்பத்தினர் நண்பர்களை புகைத்தல், மதுசாரப் பாவனையிலிருந்து பாதுகாப்போம், சுப்பர்-8 – நாம் எமது பெற்றோரைப் பராமரிப்போம் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 866413).