தொகுப்புக் குழு. யாழ்ப்பாணம்: நீரிழிவு சிகிச்சை நிலையம், யாழ். போதனா வைத்தியசாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறிண்டேர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).
viii, 201 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ, சுகாதார விடயங்கள் சம்பந்தமான கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. இவை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ வாரமலரில் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான கட்டுரைகளுக்கென ஒதுக்கப்பட்ட பிரிவில் இடம்பெற்றவை. இவை சுகாதாரம் சம்பந்தமான கேள்வி பதில்கள், சிறுவர்களுக்கான சுகவாழ்வுத் தகவல்கள், பெண்களுக்கான சுகாதாரப் பிரச்சினைகளும் தீர்வுகளும், நோய்த் தடுப்பு முறைகள், நோயுற்ற போதும் சுகத்துடன் வாழ, சுகாதாரம் சம்பந்தமான தகவல்கள், மருத்துவ இலக்கியம்- கவிதைகள், விற்றமின்கள் அல்லது உயிர்ச்சத்துக்கள், மழைநீரைக் குடிநீர் ஆக்குவது எப்படி?ஆகிய பிரிவுகளின் கீழ் இதிலுள்ள கட்டுரைகள் வகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70894).