மலர் வெளியீட்டுக் குழு. நயினாதீவு: ஆயுள்வேத வைத்திய கலாநிதி அமரர் தம்பையா மயில்வாகனம் அவர்களின் ஞாபகார்த்த மருத்துவ மலர், 2ஆம் வட்டாரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2009. (யாழ்ப்பாணம்: அன்றா டிஜிட்டல் பிறிண்டேர்ஸ்).
174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
ஆயுள்வேத வைத்திய கலாநிதி அமரர் தம்பையா மயில்வாகனம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தம் எழுதிய ‘நீங்கள் நலமாக’ என்ற நலவியல் நூலின் மீள் பதிப்பு ஆகியவை இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் கேள்வி-பதில் உருவில் எழுதப்பெற்ற விரிவான 45 மருத்துவக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. காய்ச்சல் வலிப்பு, பாலகர்களின் உணவு, பசியில்லாத குழந்தை, பேசாத குழந்தை, தூங்காத குழந்தை, மூக்கிலிருந்து வடியும் குழந்தை, குழந்தைகளில் தோற்கிரந்தி, குழந்தைகளின் பற்சொத்தை, பேன் தொல்லை, நகம் கடித்தல், தூக்கத்தில் நடை, கொப்பளிப்பானுக்கு மருந்தும் தடுப்பூசியும், இன்புளுவன்சா காய்ச்சல், செங்கண்மாரியும் ஈரல் புற்றுநோயும், முகப்பருக்கள், அழகு தேமல், யானைத் தடிப்பான், ஒட்டுக் கிரந்தி (எக்ஸிமா), எலிக்கடியும் வெண்தோல் நோயும், எலிக்கடியும் நீர்வெறுப்பு நோயும், குழந்தையின்மை, கருத்தடை (ஆணுறை, கருத்தடை ஊசி, அவசரக் கருத்தடை), மார்புப் புற்று நோய், வெள்ளை படுதல், மாதவிடாய் நின்றபின் தீட்டுப்படுதல், நீரிழிவு-அவதானிக்க வேண்டியவை, நீரிழிவு (அவதானிக்க வேண்டியவை , உணவு, பிரஷர்- அவதானிக்க வேண்டியவை, பிரஷர்-எந்தளவிற்குக் குறைக்கலாம், கோபமும் மாரடைப்பும், கண்நோய், சைனஸ் நோய், குறட்டைத் தொல்லை, தலைவலி-கபாலக் குத்து, தைரொயிட் சுரப்பி வீக்கம், வாய்ப் புண்கள், முரசிலிருந்து இரத்தம் வடிதல், எரிச்சலடையும் குடல், வாய்வுத் தொல்லை, மூல நோய், இறுகிய தோள்மூட்டு, மூட்டு வாதம், நாரிப்பிடிப்பு-பிறப்புக் கோளாறு, நாரிப்பிடிப்பு- இடைத்தட்டம் விலகல், முழங்கால் வலி, முதுமையைப் புரிதல், முதுமையில் மனச் சோர்வு, முதுமையில் உணவு, முதுமையில் சில உதவிக் குறிப்புகள் ஆகிய 43 தலைப்புகளில் மருத்துவத் தகவல்கள் எளிமையான உரைநடையில் வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 112307).