ஆறுமுகம் சிதம்பரநாதன். தெல்லிப்பழை: ஆறுமுகம் சிதம்பரநாதன், 1வது பதிப்பு, 1928. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
(16), 152 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 3.00, அளவு: 20.5×14.5 சமீ.
நாடி தர்ப்பணம். ஆறுமுகம் சிதம்பரநாதன். யாழ்ப்பாணம்: மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், வட மாகாணம், 2வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 1928. (யாழ்ப்பாணம்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி, கோண்டாவில்).
vii, 204 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
நாடியின் இலட்சணங்களைப் பரீட்சித்து அறியும் முறைகளை விளக்கும் சித்த மருத்துவ நூல் இதுவாகும். ஐந்து அத்தியாயங்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. நாடிப் பரீட்சையாவது ஜீவநிலைமைகளைக் குறிப்பதான தாதினிலக்கணங்களை விரல்களினால் நாடிக் குறிப்பிடங்களில் தொட்டுணர்ந்து அவ்விலக்கணங்களின் வேறுபாடுகளை சோதனை செய்தறிவதாகும். நாடி இலக்கணத்தை அறிந்துகொள்ளாமல் ஒரு வைத்தியன் நிதானநூல் வாக்கியத்தின்படி வைத்தியத்தை தொடங்கக்கூடாது என்று நாடி தர்ப்பணம் அழுத்தமாகக் குறிப்பிடுகின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 74620, 73657).