ஹரிஸ்சந்திர யக்கந்தாவல, எம்.எச்.எம்.யாக்கூத். கொழும்பு: சுகாதாரக் கல்விப் பணிமனை வெளியீடு சுகாதார சேவைகள் அபிவிருத்திச் செயற்றிட்டம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு: UNICEF அச்சகம்).
(12), 45 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ.
பாலியல் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் நோய்கள், கோணோறியா, சிபிலிசு, பாலுறுப்பு ஹேர்பீஸ், பாலுறுப்பு உண்ணிகள், கோணோறியா அல்லாத சிறுநீர் அழற்சி, பாலியல் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் ஏனைய நோய்கள்-ஈரலழற்சி B, திரைக்கோமொனாஸ் வஜினோலிஸ் தொற்று, பங்கசுக்கள் காரணமாக ஏற்படும் நோய்கள், எச்.ஐ.வீ/எயிட்ஸ், மானுட நிர்பீடனக் குறைபாட்டு வைரசு, எச்.ஐ.வீ. தொற்றும் வழிகள் எவை?, எச்.ஐ.வீ. தொற்றத்தக்க ஆபத்தைப் பெருமளவுக்குக் கொண்டுள்ளோர் யார்?, எச்.ஐ.வீ/எயிட்ஸ் தொடர்பாக இலங்கை நிலவரம், எச்.ஐ.வீ/எயிட்ஸ் தொடர்பாக உலக நிலவரம், எச்.ஐ.வீ. பரவுவதில் பங்களிப்புச் செய்யாதவை, எச்.ஐ.வீ. இற்கான இரத்தச் சோதனை, எச்.ஐ.வீ. யும் நிர்பீடனத் தொகுதியும், எயிட்ஸ் நோயின் குணங்குறிகள், எச்.ஐ.வீ. தொற்றுக்குரிய சிகிசிசை, எச்.ஐ.வீ. பரவுவதைத் தவிர்த்தல், ஆணுறை (கொண்டம்) பயன்படுத்துதல், குருதிப் பாய்ச்சல் மூலம் எச்.ஐ.வீ. கடத்தப்படுதலைத் தவிர்த்தல், பொதுப் பாதுகாப்பு வழிகள், எயிட்ஸ் நோயும் குருதிப் பாய்ச்சலும், எச்.ஐ.வீ/எயிட்ஸ் நோயும் பெண்களும், எச்.ஐ.வீ. தொற்றும் தாய்ப்பாலூட்டலும், எச்.ஐ.வீ. யும் நிர்ப்பீடனமாக்கலும், எச்.ஐ.வீ./எயிட்ஸ் நோயுடன் வாழ்தல், சுகாதாரத் தொடர்பாடலாளரின் பொறுப்புக்கள், நோய் தவிர்ப்புக் கல்விச் செயல்முறை, பாலியல் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் நோய்கள் மற்றும் எயிட்ஸ்/எச்.ஐ.வீ. தொடர்பான சோதனைகள் சிகிச்சை-ஆலோசனைகள் ஆகியவற்றுக்காகச் செல்லத்தக்க அரச நிறுவனங்கள் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 80525).