17376 சிறுநீரகக் கற்கள்: சிகிச்சை முறைகளும் ஆலோசனைகளும்.

பா.பாலகோபி, பிரம்மா ஆர்.தங்கராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 87 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-52-2.

இந்நூலில் பொதுவாகச் சிறுநீரகக் கற்களால் மருத்துவ நடைமுறையில் எதிர்கொள்ளப்படும் அசௌகரியங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரகக் கற்கள் சம்பந்தப்பட்ட மருத்துவரீதியான அடிப்படை அறிவைப் பற்றிய தெளிவான புரிதலை நிறுவும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுநீரகங்கள் பற்றி அறிவோம், சிறுநீரகக் கற்கள், நோய் நிர்ணயம் செய்தல், சிகிச்சை முறை, ஆலோசனை, பொதுவான சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சைகள் பற்றிய விளக்கங்கள், சிறுநீரகங்களைக் காத்தல் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. டாக்டர் பா.பாலகோபி, யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பயின்று 2015இல் சிறுநீரக சனனித் தொகுதி சத்திர சிகிச்சையில் MD பட்டத்தினை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்திற்கான பட்டப் பின்படிப்பு நிலையத்தில் (PGIM) பெற்றுக்கொண்டவர். 2019 முதல் சிறுநீரக சனனித்தொகுதி சத்திர சிகிச்சை நிபுணராக யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றுகின்றார். டாக்டர் பிரம்மா ஆர்.தங்கராஜா, யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 2006இல் I.M. Sechenow Moscow Medical Academy யில் தனது மருத்துவப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டவர். 2014இல் தனது ஆனு பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத்திற்கான பட்டப் பின்படிப்பு நிலையத்தில் (PGIM) பெற்றுக்கொண்டவர். 2018 முதல் 2020 வரை வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுநீரகவியல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றிய இவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மருத்துவ நிபுணராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71461).

ஏனைய பதிவுகள்